தேசியக் கூடைப்பந்து கழகம், பொள்ளாச்சி மகாலிங்கம் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநில அளவிலான கூடைபந்து போட்டி பொள்ளாச்சியில் நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டன, இதில் அதிரவ் வர்மன் ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் தஞ்சை மாவட்டம் வீராங்கனைகள் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சாதனை படைத்த தஞ்சை வீராங்கனைகள் தஞ்சையில் கவுரவிக்கப்பட்டனர்.
மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் ஆகியோர் சாதனை படைத்த வீராங்கனைகளை பாராட்டி பரிசு கோப்பைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அதிரவ் வர்மன் ஸ்போர்ட்ஸ் அகடாமி பயிற்சியாளர் ராஜு, மேனேஜர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.