வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க மாட்டேன் என ஸ்டாலின் சட்டமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், அடுத்த விக்கிரவாண்டி அருகே உள்ள சாணிமேடு கிராமத்தில் பாமக வேட்பாளர் சி. அன்புமனியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து வாக்காளர் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது;-

இடைத்தேர்தல் மிக முக்கியமான தேர்தல் என்றும், உரிமைகளுக்காக நடைபெறுகிற தேர்தல் நிச்சயமாக இந்த தேர்தலில் பாமக வெற்றி பெறும் என்றும், திமுக இடைத்தேர்தலில் பணத்தை மட்டும் நம்பியிருப்பதாகவும், சாதனை சொல்லி வாக்கு கேட்கபோவதில்லை, அவர்கள் எதுவும் செய்யவில்லை,
இந்த இடைத்தேர்தலில் எவ்வளவு பணம் மூட்டைகள் வைத்திருந்தாலும் திமுக வெற்றி பெறாது. பண மூட்டைகள் எடுத்து வந்து வாக்கு கேட்டால் வாங்குவீர்களோ அல்லது வாங்க மாட்டீர்களோ பாமகவிற்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். அப்போது தான் சமூக நீதி காக்கப்படும் என தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் வாக்களிக்க அமைச்சர்கள் பணம் கொடுத்து விட்டு போய்விடுவார்கள். அதன்பிறகு அமைச்சர்களை நாம் பார்க்க முடியாது. எல்லா கட்சியினருக்காகவும், பாமக நிறுவனர் ராமதாஸ் போராடி கொண்டிருப்பதாகவும், அதிமுக இத்தேர்தலில் போட்டியிடவில்லை.
ஆகவே பொது எதிரியான திமுகவை வீழ்த்த அதிமுகவினர் பாமகவினருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க மாட்டேன் என ஸ்டாலின் சட்டமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும்,

இது சாதி பிரச்சனை இல்லை. வேலை வாய்ப்பு கல்வியில் இடம் கொடுங்கள் என்று தான் கேட்பதாகவும், கட்சியை பார்க்காமல் சமூக நீதி கிடைக்க வாக்களியுங்கள் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.