விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் – அமைச்சர் அன்பில் மகேஷ்..!

0
17

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் அமைச்சர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

விக்கிரவாண்டி இடைதேர்தல்

அந்த வகையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணை குப்பம், காணை உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பரப்புரை மேற்கொண்டார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

அப்போது பேசிய அவர்;- தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் முதல் கையெழுத்து மகளிர் உரிமைத்தொகை வழங்குவது ஆகவே இருந்தது. அடுத்ததாக மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும்,

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தனியார் கல்லூரியில் படித்தாலும் கூட ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மாதம் வழங்குகிற திட்டமும் செயல்படுத்தி உள்ளார். இந்த திட்டங்கள் அனைத்தையும் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தைச் சேர்ந்த முதலமைச்சர்கள் வந்து பார்வையிட்டு செல்லுகிறார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தவும் தொடங்கியுள்ளார்கள். இதுபோன்ற சிறந்த திட்டங்களை வழங்கக்கூடிய முதல்வர் தான் நம்முடைய தமிழக முதல்வர் அவருக்கு கூடுதல் வளம் சேர்ப்பதற்காக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here