கையில் கத்தியுடன் வன்முறையை தூண்டும் பேச்சு – இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்த இளைஞர் கைது..!

1 Min Read

தென்காசி மாவட்டத்தில் கையில் கத்தியுடன் வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

- Advertisement -
Ad imageAd image

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவது மற்றும் ஆன்லைன் உள்ளிட்ட நூதன மோசடி தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ

அந்த வகையில், தென்காசி மாவட்டம், அருகே புளியரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (23). இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஆயுதங்கள் வைத்துக் கொண்டு வீடியோ பதிவிட்டுள்ளார்.

புளியரை காவல்துறை

அந்த வீடியோவில் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துக் கொண்டு வன்முறையை தூண்டும் வகையிலான வசனம் பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளோர்.

கைது

இது தொடர்பாக புளியரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் வன்முறையை தூண்டும் வகையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு வீடியோ வெளியிட்ட சுடலை முத்து மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கையில் கத்தியுடன் வன்முறையை தூண்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்த சம்பவம் சமுக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review