கேரளாவில் பாஜக-வுக்கு வாக்களிக்க ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டுகள் பதிவாவதால் அதிர்ச்சி பெரும் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளாவில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் காசர்கோடு தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு 2 ஓட்டுகள் பதிவானது கண்டு எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக-வுக்கு ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 வாக்குகள் பதிவாகும்படி மென்பொருள் இருப்பதாக புகார் எழுந்தது. அப்போது 9 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுக்காக ஒரு முறை பட்டனை அழுத்தும் போது பாஜக தவிர மற்றவர்களுக்கு ஒரு ஒப்புகைச் சீட்டு மட்டுமே வருகிறது.

கேரளாவில் அதிர்ச்சி – பாஜக-வுக்கு வாக்களிக்க ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டுகள் பதிவு
ஒரு முறை பட்டனை அழுத்தினால் பாஜக-வுக்கு மட்டும் 2 ஒப்புகைச் சீட்டு வருகிறது. பாஜக-வுக்கு இரண்டு வாக்குகள் பதிவாவது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார் அளித்துள்ளனர்.