கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பேருந்து சாலையோர உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து இதில் பயணம் செய்த 65 பள்ளி குழந்தைகளில் 8 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி.உயிரிழப்பு ஏதும் இல்லை தொடர்ந்து போலிசார் விசாரணை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சமத்துவ புரத்திலிருந்து மூங்கில் பாடி செல்லும் சாலையில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் அலட்சியத்தால் சாலை ஓரம் இருந்த விவசாய நிலத்தில் உள்ள பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 65 பள்ளிக் குழந்தைகளில் 8 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் பயணம் செய்த 65 குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்ன சேலம் தாசில்தார் கமலக்கண்ணன் நேரில் ஆய்வு செய்தார் இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ள குழந்தைகளை நேரில் சென்று ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் பேருந்து ஓட்டுநர் வேலுமணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பெற்றோர்கள் பதற்றத்துடன் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்டு கதறி அழுதனர்.நல்வாய்ப்பாக பெரிய அளவில் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் கவனத்துடன் இயக்க வேண்டும்,அது போல வகனம் ஓட்டுபவர்கள் உரிய ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார போகுவரத்து அதிகாரிகள் பள்ளி வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.இருந்தும் சில பழுதுள்ள வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தான் வருகின்றன.மாவட்ட நிர்வாகம் இதனை கண்காணிக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் வாகன விபத்து குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கேட்டுள்ளனர்.
போலிசாரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் இன்றோ,நாளையோ வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.