தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அரியூர் மலையடிவாரத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியினால் நீரோடைகள் ஆக்கிரமைக்கப்பட்டு மலையில் பெய்யும் மழையான குளங்களுக்கு செல்லாமல் தடுக்கப்பட்டதால் குளங்கள் அனைத்தும் வறண்ட நிலையில் காணப்படுவதால், ஆயிரகணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கபடைந்து வருகிறது.
அதனால் ஐந்து கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி கால்நடைகளை கூட மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல முடியாத நிலை அவலநிலை ஏற்பட்டுள்ளதனால் ஆத்திரமடைந்த இருமன்குளம், வடக்குப்புதூர், வீரிருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர், அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மருதஉடைய அய்யனார் திருக்கோவிலில் அமர்ந்து காலையிலிருந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது கல்குவாரிக்கு எதிராக தொடர் உண்ணாவிரதப்போராட்டம் அறிவித்ததால் காவல் துறையினர் குவிக்கப்பட்டு மக்களை கலைந்து செல்ல எச்சரித்தனர். தொடர்ந்து தங்களை திசை திருப்ப நினைத்தால் நாங்கள் அனைவரும் தேசிய கொடியுடன் மலையில் குடியேறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அந்த மக்கள் கூறியதனால் காவல்துறையினருக்கும் உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரண்டு டிஎஸ்பிக்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கரன்கோவில் வட்டாச்சியர் பழனிவேலுச்சாமி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிம் கல்குவாரி சம்பந்தமான கோரிக்கை உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
ஏற்கனவே கடந்த வாரம் அரியூர் மலையை பார்வையிட சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவாளர்களுக்கும், கல்குவாரியில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால். கல்குவரியில் பணிபுரியும் ஊழியர்களை சீமான் ஆதரவாளர்கள் தாக்கியதாக சீமான் உள்ளிட் 13பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தது குறிப்பிடதக்கது