காலாவதியான அப்பளக்கட்டு விற்பனை செய்த புகாரில் பண்ருட்டி மளிகை கடை உரிமையாளர் ரூபாய் 25 ஆயிரம் நஷ்ட வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், அருகே உள்ள பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் திவ்யா. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள ஒரு மளிகை கடையில் தனக்கு தேவையான பூண்டு அப்பளம் மளிகை கடையில் வாங்கியுள்ளார். அந்த மளிகை கடையில் 1 கிலோ பூண்டு 10 சிறிய அப்பள கட்டு மற்றும் 3 பெரிய அப்பளக்கட்டு வாங்கி இருக்கிறார். அதற்கு எல்லா பொருட்கள் சேர்த்து மொத்தம் ரூபாய் 205 பணம் கொடுத்துள்ளார்.
இதற்கான விற்பனை ரசீது கேட்ட போது கடைக்காரர் மொத்தமாக வாங்கினால் தான் கொடுப்போம் எனவும், சில்லறையில் வாங்கும் பொருட்களுக்கு கொடுப்பதில்லை என்று மறுத்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த திவ்யா மறுநாள் சமையல் முடித்து அப்பளம் பொரிப்பதற்காக அப்பளக்கட்டு எடுத்து பார்த்த போது பெரிய அப்பளக்கட்டில் மூன்றில் ஒரு கட்டும் சிறிய அப்பளக்கட்டில் இரண்டு கட்டும் மொத்தம் 3 அப்பளக்கட்டுகள் காலாவதியாகியிருந்தது என தெரியவந்தது.

மேலும் எம்.ஆர்.பி விலையை விட குறைத்து கடைக்காரர் விற்பனை செய்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் சென்று காலாவதியான அப்பளக்கட்டை மாற்றி தருமாறு கேட்ட போது அதற்கு கடைக்காரர் பிரித்த அப்பள கட்டுகளை மாற்ற முடியாது என்று அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து காலாவதியான பொருட்களை விரைவாக விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எம்.ஆர்.பி விலையை விட குறைவாக விற்பனை செய்திருப்பதாக சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதாக விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் திவ்யா வடக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் கடை உரிமையாளர் நியாயமற்ற முறையில் வர்த்தக நடைமுறையை பின்பற்றியதற்காவும் முறையீட்டாளருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் இழுப்பீடாக ரூபாய் 10000 மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூபாய் 5000 செலுத்த வேண்டும்.

இந்தக் கடையின் மூலம் பல்வேறு நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதுவதால் கடை உரிமையாளரை தண்டிக்கும் வகையில் ரூபாய் 10 ஆயிரத்தை நுகர்வோர் சட்ட உதவி கணக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் விழுப்புரம் என்ற கணக்கிற்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.