லால்குடி அருகே பாஜக கொடி கட்டிய காரில் ரூபாய் 75,860 பணம் மற்றும் பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர் பறிமுதல்..!

1 Min Read

திருச்சி லால்குடி அருகே பாஜக கொடி கட்டிய காரில் ரூபாய் 75,860 பணம் மற்றும் பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர் பறிமுதல் செய்தனர் தேர்தல் பறக்கும் படையினர்.

- Advertisement -
Ad imageAd image
பாஜக கொடி கட்டிய கார்

திருச்சி, அருகே கல்லக்குடி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையின் போது பாஜக கொடி கட்டிய காரில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெகநாதன் மற்றும் சிவலிங்கம் என்பவரும் திண்டுக்கல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

பாஜக கொடி கட்டிய காரில் ரூபாய் 75,860 பணம் மற்றும் பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர் பறிமுதல்

அப்போது அந்த காரை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணம் இல்லாமல் ரூபாய் 75,860 பணம் மற்றும் பிரதமர் மோடி உருவம் பதித்த கவர் இருந்ததை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

முதுநிலை வருவாய் ஆய்வாளர் அப்துல்காதரிடம் ஒப்படைப்பு

இதை உடனடியாக தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் லோபோ, முதுநிலை வருவாய் ஆய்வாளர் அப்துல்காதர் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review