டெலிகிராம் செயலி மூலம் வேலை வாங்கி தருவதாக ரூ.17.2 லட்சம் மோசடி!

1 Min Read
நூதன மோசடி

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான மென்பொருள் நிபுணர் ஒருவர், “பகுதிநேர” வேலை மூலம் எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என உறுதியளிக்கப்பட்டு  இரண்டு நபர்களால் ஏமாற்றப்பட்டதால் ₹17.2 லட்சத்தை இழந்துள்ளார் என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ஒருவர் தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

பணத்தை பறிகொடுத்தவர்  கடுமையான  மனஅழுத்ததில் இருப்பதால் அவருடைய பெயரை வெளியிடவேணாம் என்றும் காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய உயர்மட்ட ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கப்பட்ட நபரை  கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு ஆணும் பெண்ணும் தொடர்பு கொண்டு, ஹோட்டல் முன்பதிவு தொடர்பான பகுதி நேர வேலையை ஆன்லைனிலில் செய்யலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளனர்.

இருவரும் டெலிகிராம் செயலி மூலம் வேலையைச் செய்ய அவருக்கு இணைப்பை அனுப்பியதாக போலீஸார் தெரிவித்தனர்.

பதிவிற்காக சிறிது தொகையை முன்பணமாக செலுத்துமாறு அந்த நபர்கள்  முதலில் கூறினர்.

அடுத்த சில நாட்களில் ஐடி நிபுணரிடமிருந்து ₹ 17.28 லட்சத்தைப் பெற்று உள்ளனர் , ஆனால் அவருக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட படி முன்பணத்தை திருப்பி தரவில்லை , பணத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டபோது இருவரும் பதிலளிக்காமல் அவரது தொலைபேசி அழைப்புகளை நிராகரித்துள்ளனர் .

பாதிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுனர் அளித்த புகாரின் பேரில், அம்பர்நாத் போலீஸார் ஐடி சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப வல்லுனரை ஏமாற்றியவர்கள்  ராகுல் சர்மா மற்றும் சினேகா என போலீசார் கண்டுபிடித்துள்ளனர் .

Share This Article
Leave a review