ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் தமிழக அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது. பலம் வாய்ந்த மும்பை அணியை தமிழக அணி அரையிறுதியில் எதிர்கொண்டது.

மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தமிழக அணியில் முன் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

அரையிறுதி ஆட்டத்தில் தமிழக அணி தோல்வி – மும்பை அணி அபார வெற்றி

மேலும் 17 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை தமிழக அணி இழந்தது. விஜய் சங்கர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பொறுப்பாக விளையாடி முறையே 44 மற்றும் 43 ரன்கள் எடுக்க தமிழக அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை அடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய மும்பை அணியும் தடுமாறியது. முஷீர்கான் 55 ரன்கள் எடுத்து வெளியேற அந்த அணியின் நடுவரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார். இதனால் மும்பை அணி 16 ரன்கள் எடுப்பதற்குள் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அரையிறுதி ஆட்டத்தில் தமிழக அணி தோல்வி – மும்பை அணி அபார வெற்றி

எனினும் அப்போது களத்திற்கு வந்த சிஎஸ்கே வீரர் ஷர்துல் தாகூர் அபாரமாக விளையாடி 15 பந்துகளில் 109 ரன்கள் விளாசினார். அதில் 13 பவுண்டர்களும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.

இதேபோன்று தனுஷ் கோடியான் என்ற வீரர் 89 ரன்கள் சேர்க்க மும்பை அணி 378 ரன்கள் எடுத்தது. 232 ரன்கள் பின்தங்கிய நிலையில் தமிழக அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. எனினும் மும்பை அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தமிழக அணி அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது.

அரையிறுதி ஆட்டத்தில் தமிழக அணி தோல்வி – மும்பை அணி அபார வெற்றி

சாய் சுதர்சன் ஐந்து ரன்களிலும் நாராயண் ஜெகதீசன் டக் அவுட்டாகியும், வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களிலும் வெளியேற பாபா இந்திரஜித் மட்டும் ஆபரமாக விளையாடி 70 ரன்கள் சேர்த்தார். இதுபோன்று கீழ் வரிசை வீரர்கள் யாரும் பெரிய ஸ்கோர் எடுக்காமல் அடுத்தடுத்து வெளியேறினார்.

இதனால் தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 51.5 ஓவர்களில் எல்லாம் 162 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் மும்பையின் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அரையிறுதி ஆட்டத்தில் தமிழக அணி தோல்வி – மும்பை அணி அபார வெற்றி

இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிச்சுற்றுக்கு தமிழக அணி முன்னேறும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here