விழுப்புரத்தில் வரும் 23ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்..!

2 Min Read

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023 – 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு 3 மாபெரும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்திட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், மூன்றாம் நிகழ்வாக வரும் 23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

- Advertisement -
Ad imageAd image
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி

இந்த முகாமில் உற்பத்தி தகவல் தொழில் நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த 150 -க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப் பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் முகாமில் 8 -ம் வகுப்பு, 10 -ம் வகுப்பு, 12 -ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பொறியியல், செவிலியர் ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதியை உடையவர்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடுபவர்களும் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி

மேலும் முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்கள் மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review