திருமணம் ஆகாமல் கர்ப்பம் : தனக்கு தானே பிரசவம் பார்த்த நர்ஸ் – குழந்தை கை, கால்கள் கிழிந்து பரிதாப பலி..!

2 Min Read

திருமணத்திற்கு முன்பு காதலனால் கர்ப்பமான நர்ஸ் ஒருவர், பெற்றோருக்கு தெரியாமல் தனக்கு தானே பிரசவம் பார்த்த போது, பச்சிளம் குழந்தை கை, கால்கள் கிழிந்த நிலையில் உயிரிழந்தது. இதனால் உடல் அளவில் பாதிக்கப்பட்ட நர்ஸ் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்து (24) நர்ஸான இவர், சென்னை தி.நகர் சவுத் போக் சாலையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார்.

காதல்

அவருக்கு சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பொறியாளர் செல்வமணி (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் பல இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர்.

அதில் நர்ஸ் கர்ப்பமானார். இதுகுறித்து இந்து தனது பெற்றோருக்கு தெரிவிக்காமல் மறைத்து சொந்த ஊருக்கு செல்லாமல் சென்னையிலேயே இருந்துள்ளார்.

காதலால் ஏற்பட்ட கர்பம்

இதற்கிடையே 7 மாத கர்ப்பமான இந்துக்கு திடீரென நேற்று முன்தினம் வயிற்று வலி ஏற்பட்டது. அவர் நர்ஸ் என்பதால், தனக்கு தானே மருந்துகள் உட்கொண்டு வலியை தாங்கி இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் குழந்தை வெளியே வர தொடங்கியதும், தனக்கு தானே பிரசவம் பார்க்கும் வகையில் வெளியே வந்த குழந்தையின் கை மற்றும் கால்களை பிடித்து இழுத்துள்ளார்.

திருமணம் ஆகாமல் கர்ப்பம் : தனக்கு தானே பிரசவம் பார்த்த நர்ஸ் – குழந்தை கை, கால்கள் கிழிந்து பரிதாப பலி

அதில் குழந்தையின் கை மற்றும் கால்கள் கிழிந்து தனியாக வந்துள்ளது. அப்போதும் விடாமல் குழந்தையை பிடித்து இழுத்துள்ளார். அதில் குழந்தை இறந்து பிறந்தது.

இதனால் இந்துக்கு ரத்த போக்கு அதிகரித்துள்ளது. பதற்றமடைந்த அவர் உடன் பணியாற்றும் நர்ஸ்களுக்கு இதுபற்றி தெரிவித்துள்ளார். அதேநேரம், வலியை பொருப்படுத்தாமல் இந்து கிழிந்த குழந்தையின் கை மற்றும் கால்களை கழிவறையில் வீசியுள்ளார்.

அரசு மகப்பேறு மருத்துவமனை

பிறகு தன்னுடன் வேலை செய்த நர்ஸ்கள் வந்து பார்த்த போது, சுயநினைவின்றி மயங்கி கிடந்துள்ளார். உடனே அவர்கள் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் உதவியுடன் எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

அங்கு இந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் மருத்துவம் பார்த்ததால் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

மாம்பலம் போலீசார்

இது குறித்து எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் படி, நர்ஸ் இந்து மீது மாம்பலம் போலீசார் 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அவரது காதலன் செல்வமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பணியாற்றி வரும் நர்ஸ், காதலனுடன் ஏற்பட்ட தகாத உறவினால் கர்ப்பமாகி தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review