“x” சமூக வலை தளத்தில் பாஜக தலைவர்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோவையில் புகார் கொடுத்த மகளிர் அணியினர்.
சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய சிறப்பு பிரிவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் தனி நபர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய மாவட்ட மற்றும் மாநில அளவில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுகள் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்த நிலையில்,
தற்பொழுது அரசியல் கட்சித் தலைவர்களை சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பதிவு செய்து வருவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகரம் மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயஸ்ரீ குன்னத் இன்று காலை அவர் வழக்கம் போல் அவர் “x” சமுக வலைத்தளத்தில் உள் நுழைந்து பல்வேறு கருத்துக்களை பார்த்து வந்தார்.

அப்போது “ethisundar” *https://x.com/ethisundar/status/1802249809316774264” என்ற கணக்கில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியை பகிர்ந்து அதன் மேல் “வயாகரா நல்ல எழுச்சியை கொடுக்குமோ?” என்று அருவருக்கத்தக்க வார்த்தைகளில் அந்த நபர் X தளத்தில் பகிர்ந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அந்த நபரின் கணக்கில் ஒரு குழந்தையின் புகைப்படத்தை பயன்படுத்தி அவரது தோற்றத்தை மறைத்து உள்ளார். எனவே சமூக வலைத்தளத்தில் பெண்ணியத்தை அவதூறாக பகிர்ந்து உள்ள மேற்படி நபரை யார் என்று கண்டு அறிந்து அவர் மீது வழக்கு பதிவு செய்தும்,
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வண்ணத்தில் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.