க.பொன்முடி
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர்.தமிழக அமைச்சரவையின் உயர் கல்வி அமைச்சர் ஆவார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராகி படிப்படியாக வளர்ந்து ஒருகினைந்த விழுப்புரம் மாவட்டத்தின் திமுகவின் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து, தற்போது துணைப் பொதுச்செயலாளராக உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் டி.எடையார் கிராமத்தில் ஆகத்து 19, 1950 ஆம் ஆண்டு பிறந்தார். வரலாறு, அரசியல் மற்றும் பொதுத்துறை நிர்வாகம் ஆகிய துறையில் முதுநிலைப் பட்டமும், வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்ற இவர் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். பொன்முடி 1989 ஆண்டு முதல் தி.மு.க.வில் முக்கியப் பதவிகளில் உள்ளார். தி மு க வினரால் இனமான இளய பேராசிரியர் என்று அழைக்கப்படுகிறார் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்இதே திருக்கோவிலூர் தொகுதியில் மீண்டும் வென்று ஆறாவது முறையாக ஆட்சியமைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில் 2021 மே 7 அன்று உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார்.
1989. விழுப்புரம். வெற்றி(அமைச்சர்)
1991. விழுப்புரம். தோல்வி
1996. விழுப்புரம். வெற்றி(அமைச்சர்)
2001. விழுப்புரம். வெற்றி
2006. விழுப்புரம். வெற்றி(அமைச்சர்)
2011. விழுப்புரம். தோல்வி
2016. திருக்கோயிலூர். வெற்றி
2021. திருக்கோயிலூர். வெற்றி(அமைச்சர்)

நான்கு முறை தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.
நில அபகரிப்பு வழக்குதொகு
1996-2001ல் திமுக அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் பின்புறமுள்ள ஸ்ரீநகர் காலனி விநாயகர் கோயில் எதிரே உள்ள தெருவில் சுமார் 3,630 சதுர அடி பரப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனது மாமியார் சரஸ்வதி பெயருக்கு பட்டா மாற்றம் செய்து, அக்காலி நிலத்தில் ரூபாய் 35 இலட்சம் செலவில் கட்டிடம் கட்டியது தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயவேல் 6 சூலை 2023 அன்று அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட ஏழு பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த எந்தவிதமான ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்படவில்லை; மேலும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்வதாக கூறி தீர்ப்பளித்தார்.

சொத்து குவிப்பு வழக்கு
1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் பொன்முடி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 1.36 கோடி மதிப்பிலான சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, திமுக ஆட்சி விலகி அதிமுக ஆட்சி தொடங்கிய போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் 2002ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. சூன் 2023ல் இந்த வழக்கு வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் 28 சூன் 2023 அன்று பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலட்சியை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, வேலூர் மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது.
இந்த வழக்கை தான் தாமாக முன்வந்து தற்போது உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
இது மட்டுமல்லாமல் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமான செம்மண் எடுத்ததாக பொன்முடி மற்றும் அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் சிகாமணி ஆகியோர் மீது ஒரு வழக்கு விழுப்புரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.