தெலங்கானா மாநிலம், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பவானிசென் கவுட் என்ற எஸ்.ஐ பணிபுரிந்து வருகிறார். இவர் தான் இந்த கொடூர சம்பவத்தை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெண் தலைமை காவலர் கூறுகையில்;- ஜூன் 16 ஆம் தேதி நீர்ப்பாசனத் திட்டத்தின் விருந்தினர் அறையில், துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியில் கூறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தார் என குறிப்பிட்டிருக்கிறார்.

துப்பாக்கி முனையில் பெண் காவலர் பலாத்காரம்
இது மட்டுமல்லாமல், நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 3 பெண் போலீசாரை பாலியல் பலாத்காரம் செய்ததாக எஸ்.ஐ பவானிசென் கவுட் மீது தொடர் புகார்கள் எழுந்தன. பாதிக்கப்பட்ட 42 வயது பெண்ணின் புகாரின் பேரில், எஸ்.ஐ பவானிசென் கவுட்டின் துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி அவரை காவலில் எடுத்தனர்.

பெண் காவலரின் புகாரை தொடர்ந்து, பவானிசென் கவுட் மீது ஐபிசி பிரிவு 376(2) (A) (B), 324, 449, மற்றும் 506 மற்றும் ஆயுதச் சட்டம் பிரிவு 27 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதன்படி, எஸ்.ஐ பவானி சென் கவுட்டை பணியில் இருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.