பிளஸ் 2 ரிசல்ட் மே 6 ஆம் தேதி – பள்ளி கல்வித்துறை..!

2 Min Read

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6 மற்றும் 10 ஆம் தேதிகளில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 7534 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மேல்நிலை பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கின்ற மாணவ, மாணவியருக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடந்தது.

பிளஸ் 2 ரிசல்ட் மே 6 ஆம் தேதி

அதை தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12616 பள்ளிகளை சேர்ந்த 9,10,024 மாணவ, மாணவியர் எழுதினர். இவர்கள் தவிர தனி தேர்வர்களாக 28827 பேரும் பத்தாம் வகுப்பு தேர்வில் பங்கேற்றனர்.

சிறைவாசிகள் 235 பேரும் எழுதினர். அதன் தொடர்ச்சியாக 118 விடைத்தாள் சேகரிப்பு மையங்களுடன், பிளஸ் 2 தேர்வுக்கு 83, பத்தாம் வகுப்புக்கு 88 மையங்களில் விடைத்தாள் திருத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

பிளஸ் 2 ரிசல்ட் மே 6 ஆம் தேதி 

விடைத்தாள் திருத்தும் பணியில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு, கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்தன.

அதற்கு பிறகு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கி, தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்துள்ள நிலையில், மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் முடிந்துள்ளன.

பள்ளிகல்வித்துறை

பொதுத்தேர்வுகள் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்ட போது, மே 6 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

அதன்படி தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை தயார் நிலையில் உள்ளது. திட்டமிட்டபடி மேற்கண்ட தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

Share This Article
Leave a review