எங்கள் பிள்ளைகளின் படிப்பை இங்கே தொடர தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் சூடானிலிருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் கதறல்

3 Min Read
சூடானிலிருந்து மீட்கப்பட்ட திண்டுக்கல் குடும்பத்தார்

சூடான் நாட்டில் கடந்த 15 நாட்களாக நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக 200 தமிழர்கள் உட்பட 3000 இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் அந்நாட்டில் சிக்கியுள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் “ஆபரேஷன் காவேரி” என்ற திட்டத்தின் மூலமாக முதற்கட்டமாக 360 இந்தியர்களை புதுடெல்லி அழைத்து வந்தனர் இதில் உள்ள ஒன்பது தமிழர்களை டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னைக்கும்,  மதுரைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் மதுரை வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஜோன்ஸ் திரவியம் ,  ஷீபா, ஜான்சி ஜோன்ஸ் மற்றும் ஜஸ்னா ஜோன்ஸ் ஆகியோரை தமிழக அரசு சார்பில் மதுரை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் வரவேற்று அவர்களது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு தனி வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோன்ஸ் திரவியம் கடந்த 15 நாட்களுக்காக சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் கடுமையான போர் நிலவி வந்தது . இந்த போர் பொதுமக்கள் குறிப்பாக 3000 கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கும் இடத்திலேயே நடைபெற்றதால் பொதுவாழ்க்கை முற்றிலுமாக ஸ்தம்பித்தது . மேலும் , உணவு , குடிதண்ணீர் , உடை , மின்சாரம் , தொலைத்தொடர்பு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்தோம் .

கடந்த 10 நாட்களாக போர் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து  துப்பாக்கி சூடுக்கு பயந்து வீட்டுக்குள்ளே அடங்கி இருந்தோம், பிறகு எங்களது நிலையை இந்திய தூதரத்துக்கு தெரியப்படுத்தினோம் .

தூதரகத்தின் மூலம்  இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது . பிறகு அவர்களது முயற்சியால் எங்களை மீட்கும் பனி துரிதப்படுத்தப்பட்டது குறிப்பாக தமிழக அரசு உன்னிப்பாக இதை கவனித்து தமிழர்களுக்கு என்ன நடக்கிறது என்பதனை பத்திரிக்கை மூலமாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் எங்களை தொடர்பு கொண்டார்கள் எங்கே இருக்கிறோம் எங்கள் அடிப்படை தேவைகள் என்னவென்று கேட்டு அறிந்து அவர்காளால் இயன்ற உதவியை செய்தனர் .

இதில் பெரும் சோகம் என்னவென்றால் , போர் உச்ச கட்டத்தை அடைந்ததால் யாராலும் சுதந்திரமாக வெளியில் செல்ல இயலவில்லை , ஒரு தெருவில் இருக்கும் நாங்கள் பக்கத்து தெருவில் வசிக்கும்  எங்களது நண்பர்களை காப்பாற்ற முடியாத துரதிஷ்ட சூழ்நிலையே அங்கு நிலவியது .

துணை ராணுவத்தினர் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் துப்பாக்கி  சூடு நடத்துவதோடு , வீடு புகுந்து உடைமைகளை சூறையாடும் செயலிலும் ஈடுபட்டனர் . தினமும் வெடிகுண்டு வெடித்துக் கொண்டே இருந்தது வான்வெளி தாக்குதலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது , ஹெலிகாப்டர் மூலமும் தாக்குதல் நடத்த தொடங்கினர் , அங்காடிகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் , உள்ளூர் வாசிகள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டனர் இந்தியர்கள் மட்டும்  தனித்து விடப்பட்டனர்  .

ஆப்ரேஷன் காவேரி மூலம் மீட்கப்பட்ட 360  இந்தியர்களில் நாங்கள் முதல் குழுவினர் இதில் தமிழர்கள் ஒன்பது பேர் மீதமுள்ள நபர்கள் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் . நாங்கள் இந்தியா வந்து இறங்கியதும் தமிழக முதல்வர் சார்பில் எங்களை வரவேற்று  டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் தங்கி வைக்கபட்டோம் .

மேலும் இன்னும் அதிகப்படியான இந்தியர்கள் குறிப்பாக  தமிழர்கள் சூடான் நாடு போரில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டெடுக்க பத்திரிக்கை மூலமும் whatsapp குரூப் மூலமும் இந்திய அரசும் நாங்களும் முயற்சித்து வருகிறோம் .

எங்களது உடைமைகள் அனைத்தையும் இழந்து ஒரு பையில் எவ்வளவு எடுக்க முடியுமோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து விட்டோம் எங்களுக்கு அடுத்த எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.

எங்களது பிள்ளைகளின் கல்வியும் கேள்விக் குறியாகியுள்ளது  அவர்களுக்கு இங்குள்ள கல்லூரியில் அட்மிஷன் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். என்று கூறினார்.

Share This Article
Leave a review