முகநூலில் பழகி ஐந்து, ஆறு மாதங்கள் திட்டமிட்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர் – ப‌.சிதம்பரம்

2 Min Read
சிதம்பரம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் சோ‌. பாலகிருஷ்ணன் இல்ல திருமண விழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்எல்ஏக்கள் முருகேசன், மாங்குடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image
ப.சிதம்பரம்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்…

நாடாளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீச்சு சம்பவம் உலக அளவில் தற்போது பேசு பொருளாகி உள்ளது.இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில் நடந்த தாக்குதல் மத்திய அரசின் கவனக்குறைவை காட்டுகிறது. 22 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி பயங்கரவாதிகளின் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மீண்டும் டிசம்பர் 13 ஆம் தேதி தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்தனர்.

இது பயங்கரவாத தாக்குதல் அல்ல. இருந்தாலும் இது ஒரு தாக்குதல் தான். ஐந்து முதல் ஆறு நபர்கள் வெல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா என வெல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி தங்கி யாருடைய தூண்டுதலின் பேரில் தாக்குதல் செய்திருக்கிறார்கள் என்றால் உளவுத்துறை என்ன செய்கிறது?.

முன்னாள் அமைச்சர் சிதம்பரம்

மூன்றடுக்கு பாதுகாப்பு, நான்கடுக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்களே தவிர எந்த அடுக்கு பாதுகாப்போம் இந்த தாக்குதலை தடுக்க முடியவில்லையே. உளவுத்துறையை தாண்டி, மத்திய ரிசர்வ் போலீசை தாண்டி, டெல்லி காவல் துறையை தாண்டி, நாடாளுமன்ற பாதுகாப்பு துறையை தாண்டி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து பார்வையாளர்கள் அரங்கம் வரை சென்று அங்கிருந்த பாதுகாவலர்களை மீறி அறைக்குள் குதித்து கண்ணீர் புகை வெடியை வெடிக்கிறார்கள் என்றால் இது முழுக்க முழுக்க அரசினுடைய, அரசின் அங்கங்களுடைய கவனக்குறைவை காட்டுகிறது. வெல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் முகநூலில் நண்பர்களாகி தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள் என்றால் இது நான்கு, ஐந்து மாதங்களாக திட்டமிடப்பட்டிருக்கும்.

15 அடி குதிப்பது என்பது எளிதல்ல. கை, கால்களை உடைத்துக் கொள்ளாமல் பயிற்சி பெற்றவர்கள் தான் 15 அடி குதிக்க முடியும். நான்கு, ஐந்து மாதங்கள் பயிற்சி இல்லாமல், திட்டமில்லாமல் இந்த தாக்குதல் நடத்தி இருக்க முடியாது இது பயங்கரவாத தாக்குதல் அல்ல. அரசியல் ரீதியாக எதிர்ப்பை தெரிவிப்பதற்காக தாக்குதல் செய்து இருக்கிறார்கள். ஐந்து, ஆறு மாதங்கள் முகநூலில் நண்பர்களாகி பயிற்சி பெற்றதை உளவுத்துறை கண்டுபிடிக்கவில்லை என்பது வியப்பாக உள்ளது என பேட்டியளித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பேட்டியளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Share This Article
Leave a review