இலங்கைக் குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறப்படும் நிலையில், விமான நிலையத்தில் குரங்குகள் செல்பி எடுப்பது மற்றும் விமானத்தில் பயணம் செய்வது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கை சீன அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சீன பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளுடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி , முதற்கட்டமாக ஒரு இலட்சம் குரங்குகளைச் சீனாவிற்கு அனுப்பி வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கை குரங்குகள் சீனா செல்லவுள்ளதை தொடர்ந்து பல்வேறுபட்ட கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இலங்கை குரங்குகள் விமான நிலையத்தில் செல்பி எடுப்பது மற்றும் விமானத்தில் பயணம் செய்வது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.