கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையில் ஈடுப்பட்ட நபர் விஜயகுமார். இவரது இல்லத்திலிருந்து நகைகளை போலிசார் மீட்டனர் – பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை கணக்கிடும் பணி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைப்பெற்று வருகிறது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 200 சவரன் தங்க நகையை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார். இதையடுத்து அவர்கள் உடனடியாக நகைக்கடையின் உரிமையாளர்கள், உயர் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். காட்டூர் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் நகைக்கடைக்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள் குற்றவாளியை பிடிப்பதற்கு காவல் துறைக்கு உதவியாக இருந்தது.

கோவை காந்திபுரம் பிரபல நகைக்கடையில் கடந்த திங்கட்கிழமை இரவு கடைக்குள் புகுந்த ஒற்றை நபர் 200 பவுனுக்கு மேலான தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பித்து சென்றார். இந்நிலையில் கொள்ளையனை பிடிக்க மாநகர காவல்துறை சார்பாக 5 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழலில் தப்பித்து சென்ற கொள்ளையன் அணிந்திருந்த சட்டையை கடையில் விட்டுச் சென்றதால் அவருடைய சட்டையில் அவர் பயணித்து வந்த அரசு பேருந்து டிக்கெட் இருந்ததால் அதன் அடிப்படையிலும், சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இருந்து கொள்ளையன் வந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து அங்கு விசாரணை நடத்தியபோது தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் சேர்ந்த விஜயகுமார் வயது 25 என தெரியவந்தது, இவருக்கு வெவ்வேறு காவல் நிலையங்களில் 4 வழக்கு உள்ளது. இதையடுத்து தனிப்படை தர்மபுரி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த தங்க நகைகளை போலீசார் மீட்டனர். போலீசார் வருவதை கண்டுகொண்ட விஜயகுமார் தப்பித்து ஓடியதாகவும், தப்பித்து ஓடிய விஜயகுமாரை பிடிப்பதற்கு போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

கொள்ளையில் ஈடுபட்டவர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயன் என்பது தெரியவந்துள்ளது. ஆனைமலையில் நண்பர் ஒருவரது வீட்டில் தங்கி இருந்தார் என தகவல் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் காவல்துறை நெருங்குவதை அறிந்து தப்பிவிட்டதாக தகவல் கொள்ளையன் மிக விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை தெரிவித்து வந்த நிலையில் தர்மபுரியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.