பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 09.05.2024 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் வினோத் கண்ணன் மற்றும் அவரது குழுவினர் லப்பைக்குடிக்காடு கிராம பகுதியில் சிறப்பு ரோந்து மேற்கொண்ட போது,

அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைக்கடிக்காடு ஜமாலியா நகரைச் சேர்ந்த உமர்பாருக் மகன் நியாஸ் அகமது (33) என்பவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.
அப்போது அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மேற்படி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபோன்று கஞ்சா, குட்கா மற்றும் கள்ளச்சாராயம் போன்ற அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். அப்போது தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும்.