மக்களே உஷார் : விமானத்திலும் பாதுகாப்பில்லை – பாத்ரூமில் சிறுமிகளை அத்துமீறி வீடியோ எடுத்த ஊழியர் கைது..!

3 Min Read

விமானத்தில் சிறுமிகளைக் குறிவைத்து அவர்களை டாய்லெட்டில் மோசமாக வீடியோ எடுத்த விமான ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். உலகெங்கும் மைனர் குழந்தைகளைக் குறிவைத்து நடக்கும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

இதன் குறிப்பாக மைனர் குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான குற்றங்கள் உலகெங்கும் கணிசமாக அதிகரித்துள்ளது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. அமெரிக்க விமான நிறுவனம் ஒன்றில் ஏர் ஹோஸ்ட்ஸாக பணிபுரியும் 36 வயதான இளைஞன் ஒருவர் விமானக் கழிவறைகளில் மைனர் குழந்தைகளைப் படம் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

விமானத்திலும் பாதுகாப்பில்லை

அப்போது அவர் பணியாற்றிய நிறுவனத்தின் மீது பலரும் வழக்கும் தொடர்ந்துள்ளனர். அவர் விமானங்களில் பல இளம் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது செப்டம்பர் மாதம் வட கரோலினாவில் இருந்து பாஸ்டனுக்குச் செல்லும் விமானத்தில் ​​14 வயது சிறுமி ஒருவரைக் கழிவறையில் வீடியோ எடுத்துள்ளார்.

அங்கே ஐபோனை மறைத்து ஒட்டி அதன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். அப்போது அலைப்பேசியை அந்த சிறுமி பார்த்து தனது பெற்றோரிடம் இது தொடர்பாகக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தான் முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தான் பல பகீர் தகவல்கள் தெரியவந்தது.

பாத்ரூமில் சிறுமிகளை அத்துமீறி வீடியோ எடுத்த ஊழியர் கைது

இந்த கீழ்த்தரமான செயலில் அவர் ஈடுபடுவது இது ஒன்றும் முதல்முறை இல்லை.. ஏற்கனவே கடந்த காலங்களிலும் பல முறை இப்படிச் செய்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த 9 வயது சிறுமி உட்பட நான்கு மைனர் சிறுமிகளையும் இதேபோல அவர் வீடியோ எடுத்ததாகப் புகார் வந்துள்ளது. இது தொடர்பாகவும் அந்நாட்டு போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

தாம்சனின் க்ளவுட் கணக்கைச் சோதனை செய்து பார்த்ததில் அதில் பல மைனர் சிறுமிகளின் அந்தரங்க படங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பல சிறுமிகள் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாத்ரூமில் சிறுமிகளை அத்துமீறி வீடியோ எடுத்த ஊழியர் கைது

குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றது என பல்வேறு பிரிவுகளின் கீழ் தாம்சன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாம்சன் விமானத்தில் கழிப்பறை பயன்படுத்த வரும் சிறுமிகளை இந்த டாய்லெட்டில் பிரச்சினை இருக்கிறது என்று சொல்லி முதலாம் வகுப்பு டாய்லெட்டை பயன்படுத்துமாறு சொல்வாராம்.

அதன்படி சிறுமிகள் கழிவறையைப் பயன்படுத்தும் போது அங்கே ஏற்கனவே மறைத்து வைத்த ஐபோன் மூலம் வீடியோ எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.கடந்த செப்டம்பர் மாதமும் 14 வயது சிறுமியை இப்படி ஏமாற்றி வீடியோ எடுத்துள்ளார். அதை அந்த சிறுமி கண்டறிந்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

பாத்ரூமில் சிறுமிகளை அத்துமீறி வீடியோ எடுத்த ஊழியர் கைது

உடனடியாக சிறுமியின் தந்தை இது தொடர்பாக தாம்சனிடம் சண்டை போட்டுள்ளார். மேலும், ஏர்போர்ட்டில் விமானம் தரையிறங்கிய உடன் இது தொடர்பாகப் புகாரும் அளித்துள்ளார். ஆனால், அதற்குள் தாம்சன் மொபைல் உடன் டாய்லெட்டிற்குள் சென்று தன்னை தானே பூட்டிக்கொண்டு இருக்கிறார்.

இதனால் அங்கே அவர் ஆதாரங்களை அழித்திருப்பார் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அப்போது தாம்சன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் அடுத்தகட்ட விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Share This Article
Leave a review