Pazhaverkadu : கடல் சீற்றத்தால் சாலையில் கடல் நீர் – போக்குவரத்து துண்டிப்பு..!

1 Min Read

பழவேற்காடு அருகே கடல் சீற்றம் காரணமாக வட சென்னை செல்லும் சாலையில் கடல் நீர் உட்பகுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வட சென்னை அனல் மலையும் எண்ணூர் துறைமுகம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் 40 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image
சாலையில் கடல் நீர்

திருவள்ளூர் மாவட்டம், அடுத்த பழவேற்காடு அருகே கருங்காலி பகுதியில் திடீரென்று கடல் சீற்றம் ஏற்பட்டு, கடல் நீர் சாலையில் உட்பகுதால் போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது.

பழவேற்காட்டில் இருந்து வடசென்னை செல்லும் சாலையில் இருக்கும் வடசென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் துறைமுகம், அதானி துறைமுகம் எல்&டி கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு இந்த வழியை தான் தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கடல் சீற்றத்தால் சாலையில் கடல் நீர் – போக்குவரத்து துண்டிப்பு

இந்த நிலையில் மீண்டும் கருங்காலி பகுதியில் கடலின் சீற்றம் அதிகமானதால் கடல் நீர் சாலையில் உட்பகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பழவேற்காட்டில் இருந்து வட சென்னை செல்லும் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பழவேற்காட்டில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர் வழியாக 40 கிலோ மீட்டர் சுற்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடல் சீற்றத்தால் சாலையில் கடல் நீர் – போக்குவரத்து துண்டிப்பு

இதுபோன்ற கடல் சீற்றம் காரணமாக சாலையில் கடல் நீர் உட்புகும் போதும் மணல் அரிப்பு ஏற்படுவதால் சிறு பாலம் உடனடியாக கட்டி தர வேண்டும் என பொதுமக்களும் மற்றும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைக்கின்றனர்.

Share This Article
Leave a review