பாலியல் வழக்கில் கைதான ஆசிரியரை விடுவிக்க கோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை பெற்றோர் மற்றும் மாணவர்கள் முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வாக்கூரில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு 3,4 வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர் கருணாகரன் என்பவர் 13 மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆட்சியர் முகாம் அலுவலகத்துக்கு போனில் புகார் வந்த நிலையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து சென்ற அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் விழிப்புணர்வு பாடம் நடத்தி விசாரணை நடத்தினர். அதில் மாணவிகள் சில புகார்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் நெப்போலியன் அளித்த புகாரின் பேரில்; விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கருணாகரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து தொடக்கப்பள்ளி அலுவலர் கவுசர் உத்தரவிட்டார். இதனிடையே ஆசிரியர் கருணாகரனுக்கு ஆதரவாக பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளி முன்பாக போராட்டம் நடத்தினர். ஆசிரியர்களுக்குள் இருக்கும் பிரச்சனையால் திட்டமிட்டு கருணாகரன் மீது பொய் புகார் கொடுத்துள்ளதாகவும், இந்த புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து அவர்களிடம் விக்கிரவாண்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் நேற்று ஆட்சியர் பிரிந்திட்ட வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர் கருணாநிதி விடுவிக்க கோரி கோஷமிட்டனர். அவர்களுடன் மாணவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு போராட்டத்தை கைவிடும் மாறும் கூறியதன் பேரில் குறிப்பிட்ட சிலரை மற்றும் ஆசிரியரிடம் புகார் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். ஆட்சியரிடம் அளித்த மனுவில் இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் கருணாகரன் 2016 முதல் 2023 ஆம் ஆண்டு வரை சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வந்தார். பள்ளியில் உள்ள வகுப்பறையை அவரே சுத்தம் செய்து அந்த நிலையில் இவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை இல்லை என்பதை பொதுமக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். எனவே இவர் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும். ஆசிரியரை மீண்டும் இதேபள்ளியில் பணியமர்த்த வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.