“அன்னை தெரசா போட்டோவாலேயே” KPY பாலா படத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்

பொது சேவை செய்து வரும் நடிகர் KPY பாலாவை ‘ஆண் அன்னை தெரசா’ என்பதை குறிக்கும் விதமாக “அன்னை தெரசா போட்டோவாலேயே” KPY பாலா படத்தை வரைந்து ஓவிய ஆசிரியர் அசத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த திருக்கோவிலூர் அருகே சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம்.

“அன்னை தெரசா போட்டோவாலேயே” KPY பாலா படத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்

அவர்கள் நடிகர் KPY பாலா அவர்களின் பொது சேவையை வாழ்த்தும் விதமாகவும், போற்றும் விதமாகவும் ஆண் வடிவில் ஓர் அன்னை தெரசா என்பதை குறிக்கும் விதமாக “அன்னை தெரசா போட்டோவாலேயே” KPY பாலா உருவத்தை ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் தான் KPY பாலா. பொதுமக்களுக்கு ஆங்காங்கே தேவைப்படும் பல நல உதவி திட்டங்களை வழங்கி வருகிறார்.

“அன்னை தெரசா போட்டோவாலேயே” KPY பாலா படத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்

சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை பாலா செய்தார். சில மாதங்களுக்கு முன்பு மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் தந்தார்.

மக்களுக்கு அடிப்படை தேவைகளில் முக்கியமான ஒன்று தான் மருத்துவ வசதி அந்த மருத்துவ வசதி எளிதில் கிடைக்கும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்துள்ளார்.

“அன்னை தெரசா போட்டோவாலேயே” KPY பாலா படத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்

அப்போது மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம் தந்தது நெகிழ்ச்சி ஏற்படுத்தியது. பாலா சிறந்த நடிகர், காமெடியன் என்பதை தாண்டி மனித நேயமிக்கவர் என்பதை சமீப காலமாக நிரூபித்து வருகிறார்.

KPY பாலா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக இருந்தாலும், ஒரு பக்கம் மக்களுக்கு பொது சேவையும் செய்து வருகிறார்.

“அன்னை தெரசா போட்டோவாலேயே” KPY பாலா படத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்

சம்பாதிக்கும் பணத்தை தன்னுடைய பெற்றோர், குடும்பத்திற்கு சேர்த்து வைப்பவர்கள் மத்தியில், தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை ஏழை எளிய மக்களுக்கு செலவழித்து வருகிறார்.

KPY பாலா அவர்கள் பொதுமக்களுக்கு செய்து வரும் பொது சேவையை வாழ்த்தும் விதமாகவும், சேவை செய்ததாலேயே பாலாவும் அன்னை தெரசா மாதிரி தான் என்று போற்றும் விதமாகவும், ‘ஆண் வடிவில் ஓர் அன்னை தெரசா- KPY பாலா’ என்பதை குறிக்கும் விதமாகவும் பிரஷ் பென்சில் ஏதும் பயன்படுத்தாமல் போட்டோவை வரைந்தார்.

“அன்னை தெரசா போட்டோவாலேயே” KPY பாலா படத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்

“அன்னை தெரசா போட்டோவாலேயே” போட்டோவில் கார்னர் பகுதியை நீர் வண்ணத்தில் தொட்டு நடிகர் KPY பாலா படத்தை ஏழு நிமிடங்களில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் உண்மையிலே நடிகர் KPY பாலா அவர்கள் ஆண் அன்னை தெரசா தான் அவரை அன்னை தெரசா போட்டோவால் வரைந்தது சரியானது தான் என்று கூறி ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களை பாராட்டினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here