அறிவுசார் மையம் திறப்பு : மாணவர்கள் திறனை மேம்படுத்த வேண்டும் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!

2 Min Read

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அறிவுசார் மையத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று துவங்கி வைத்தார். அதனை அமைச்சர் மஸ்தான் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பார்வையிட்டார். நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் மூலம் ஊரகப்பகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு தயார் செய்யவும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என்று அமைச்சர் மஸ்தான் பேசினார்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கத்தில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் அறிவுசார் மையத்தினை முதலமைச்சர் தலைமை செயலகத்திலிருந்து இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ஆட்சியர் பழனி தலைமையில் எம்.எல்.ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் முன்னிலையில், அமைச்சர் மஸ்தான் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பார்வையிட்டார். தொடர்ந்து அமைச்சர் பேசுகையில்; முதலமைச்சர் தலைமை செயலகத்திலிருந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல்வேறு முடிவுற்ற வளர்ச்சி திட்டப் பணிகளை திறந்து வைத்தார். அந்த வகையில் நகராட்சி பகுதிகளான விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், குன்றத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் ரூபாய் 76.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 43 அறிவுசார் மையங்களை திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகராட்சி துறை சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021 – 2022 ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் கீழ்ப்பெரும்பாக்கத்தில், புதிதாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் பொது வாசிப்பு பகுதி, இளையோர் ஆயத்த பகுதி, பெண்கள் வாசிப்பு மற்றும் ஆயுத்த பகுதி, 2 ஸ்மார்ட் வகுப்பு பயிற்சி அறை, பயிற்சி மையம் பாதுகாப்பு வைப்பறை, குழந்தைகள் உள்புறம், மற்றும் வெளிப்புறத்தில் கற்றல் பகுதி, வரவேற்பு பகுதி, பார்வையாளர் அமரும் பகுதி, சி.சி.டி.வி கேமரா கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து சுகாதாரமான குடிநீர் வசதி, மின்தடை ஏற்பட்டால் உடனடி மின் தேவைக்கான ஜெனரேட்டர் வசதி, போன்ற அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் மூலம் ஊரகப்பகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு தயார் செய்யவும், பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள பயனுள்ளதாக அமையும் என்றார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர்மன்ற தலைவர் சர்க்கரை, தமிழ்ச்செல்வி, பிரபு நகர், மன்ற துணைத்தலைவர் சித்திக் அலி, நகராட்சி ஆணையர் ரமேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் நந்தா நெடுஞ்செழியன், ஜெயந்தி மணிவண்ணன், நவநீதம் மணிகண்டன், மணவாளன், ஜனனி தங்கம், ஜெயந்தி மணிவண்ணன், மெரினா மற்றும் பலர் நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a review