காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் 25 வருடங்களை கடந்த ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளை மூட வேண்டும்.

1 Min Read
  • காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் 25 வருடங்களை கடந்த ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளை மூட வேண்டும் , எண்ணை கிணறுகளுக்கு வயதை நிர்ணயம் செய்ய வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் இன்று இரவு கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.

காவேரி படுகை முழுவதையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் வேளாண் மண்டல பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இன்று இரவு கும்பகோணத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்,காவிரி டெல்டா பாசன பகுதிகளில் 25 வருடங்களை கடந்த ஓஎன்ஜிசி எண்ணை கிணறுகளை மூட வேண்டும், எண்ணை கிணறுகளின் வயதை நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஓஎன்ஜிசி எண்ணை கிணறுகளின் ஆவணங்களை ஆய்வு செய்து சட்டவிரோத கிணறுகள் அனைத்தையும் மூட வேண்டும், பழைய எண்ணை கிணறுகளை பராமரிக்க அனுமதி வழங்கக் கூடாது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விளை நிலங்கள் விளை நிலங்களாகவே இருக்க வேண்டும் . காவிரி டெல்டா பாசன பகுதிகளில் முன்பு 64% உணவு உற்பத்தி இருந்தது. தற்போது 34 சதவீதமாக குறைந்து விட்டது.
இதே நிலை நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் காவிரி டெல்டா பாசனப்பகுதி பாலைவனமாக மாறும் என தெரிவித்தார்.

காவிரி டெல்டா பாசன பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்பு இந்த பகுதியில் (செங்கிப்பட்டியில் )300 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

அங்கு ரப்பர் ஷூ தயாரிக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது போல் செயல்களால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்றும் ஜெயராமன் மேலும் தெரிவித்தார்.

Share This Article
Leave a review