தூக்க கலக்கத்தில் கார் லாரி மோதி விபத்து ஒருவர் பலி. குழந்தை உட்பட மூவர் படுகாயம்.

2 Min Read
விபத்து கார்

ஆரோவில் அருகே தூக்க கலக்கத்தில் கார் லாரியில் பின்னால் மோதி விபத்து ஒருவர் பலி. குழந்தை உட்பட மூவர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

- Advertisement -
Ad imageAd image

ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவர் அப்பாஸ் அன்சாரி இவரது மனைவி ஜீனத் பி இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல் நலக் குறைவு காரணமாக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். அடிக்கடி சிகிச்சைக்காக அப்பாஸ் அவரது மனைவி ஜீனத் பி யை அழைத்துகொண்டு புதுச்சேரி வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் ஆந்திர மாநிலத்தில் இருந்து அப்பாஸ் அன்சாரி மனைவி ஜீனத் பீ மற்றும் அவர்களது மகன் முகமது சாதிக் ( ஓட்டுனர்) சூர்யா பானு பேரகுழந்தை நூமான் ஆகிரோர் தங்களது காரில் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.மனைவியின் சிகிச்சை தொடர்பாக குடும்பத்துடன் புதுச்சேரிக்கு பயனித்தனர்.

லாரி

அப்போது அதிகாலை 4.30 மணி அளவில் கார் ஆரோவில் அருகே வந்து கொண்டிருந்த போது ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்தார் நீண்ட நேரம் ஓய்வில்லாமல் ஓட்டுனர் காரை ஓட்டி வந்ததால் முன்னாள் நின்று கொண்டிருந்த லாரி மீது அப்பாஸ் அவரது குடும்பத்தினர் வந்த கார் பலமாக மோதியது இதில் கார் நிலைகுலைந்து கவிழ்ந்தது இந்த விபத்தில் அன்சாரி மனைவி ஜீனத் பீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது 8 வயது உள்ள பேரக்குழந்தை உட்பட மகன் மகள் ஆகியவர்கள் படுகாயம் அடைந்தனர்.

கார்

உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இந்த விபத்து குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நீண்ட தூர பயனம் ஓய்வில்லாமல் பயனித்தது போன்ற காரணங்களே இது போன்ற விபத்துகள் ஏற்பட காரணமாகின்றன.ஓய்வு பயனத்தில் முக்கியமானது.காயமடைந்தவிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Share This Article
Leave a review