சி.வி சண்முகம் எம்.பி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு – விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..!

2 Min Read

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் எம்.பி மீதான அவதூறு வழக்கில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் எம்.பி தமிழ்நாடு அரசையும், முதல்வரையும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள நாட்டார் மங்கலம் என்ற பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் பேசும் போது, தமிழக அரசையும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பற்றியும் அவதூறாகப் பேசியதாக அரசு வழக்கறிஞர் டி. சுப்ரமணியம் சார்பில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் எம்.பி

அவரது புகழுக்கும் நற்பெயர்க்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் நேற்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி பூர்ணிமா வரும் ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் சி.வி சண்முகம் எம்.பி நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார். அதே சமயம் கடந்த மே 1 ஆம் தேதி கோட்டக்குப்பம் என்ற இடத்திலும் சி.வி. சண்முகம் இதேபோன்று அவதூறாகப் பேசி இருந்தார். இது தொடர்பாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த இரு வழக்குகளும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி (21.11.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் 3 -வது முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து பொறுப்பு நீதிபதி வெங்கடேசன் இந்த வழக்கை டிசம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

ஜனவரி 4 ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

அதேபோன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த ஜூன் மாதம் அதிமுக பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாகப் பேசியதாக அரசு வழக்கறிஞர் சுப்ரமணியம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் மீது 3 வது வழக்காக தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி பூர்ணிமா இன்று (20.12.2023) விசாரணை செய்தார். இதனையடுத்து சி.வி. சண்முகத்தை ஜனவரி மாதம் 4 ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

 

Share This Article
Leave a review