சின்னசேலம் ஓட்டலில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல்.

0
78
உணவகங்களில் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன் மற்றும் அன்பு பழனி சண்முகம் ஆகியோர் இன்று சின்னசேலத்தில் உணவகங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

உணவகங்களில் ஆய்வு

உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில் சின்னசேலம் சேலம் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஹார்ட் பீட் என்ற கடையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு சத்துணவு முட்டைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் சத்துணவு முட்டைகள் சுமார் 100 முத்திரை இடப்பட்ட முட்டைகள் கடையில் இருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். முட்டை வைத்திருந்த அந்த கடைக்கு ரூபாய் 5000 அபராதம் விதித்தனர்.

உணவகங்களில் ஆய்வு

தொடர்ந்து பல்வேறு கடைகளில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உணவு கலப்படத்தை தாண்டி பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் தனியார் ஹோட்டல்களில் கிடைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here