உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேர் தீயில் கருகி உயிரிழப்பு,

0
63
தீயில் கருகி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுரங்கன் மகள் திரவியம் வயது 36, இவருக்கு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதுரைவீரன் என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன, இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் திரவியம் இருந்து வருகிறார்,

இந்த நிலையில் இன்று இரவு 12 மணி அளவில் திரவியம் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலையில் ஈடுபட்ட பொழுது வீட்டில் நடத்தி வரும் விவசாய மருந்து கடையில் இருந்த திரவ மருந்துகள் எரிந்ததால் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளான யாழினி வயது 5 கிருஷ்ணகுமாரி வயது 3 மற்றும் திரவியத்தின் தந்தை பொன்னுருங்கள் வயது எழுவது ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தீயில் கருகி உயிரிழப்பு

உடனே அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் திருநாவலூர் காவல் நிலையம் மற்றும் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் இத்தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் சம்பவம் குறித்து திருநாவலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் இக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here