தனக்குதானே பிரசவம் பார்த்த நர்ஸ் கைது..!

2 Min Read

தனக்குதானே பிரசவம் பார்த்த விவகாரத்தில் நர்ஸை போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா (24). நர்ஸான இவர், சென்னை தி.நகர் சவுத் போக் சாலையில் தங்கி தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றினார்.

- Advertisement -
Ad imageAd image

அவருக்கு சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பொறியாளர் செல்வமணியுடன் (29) ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமானார். இதை வீட்டிற்கு சொல்லாமல் மறைத்துள்ளார்.

தனக்கு தானே பிரசவம் பார்த்த நர்ஸ்

இதற்கிடையே 7 மாத கர்ப்பமான நிலையில் திடீரென கடந்த 30 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதை யாருக்கும் சொல்லாமல் வினிஷா தனக்கு தானே கழிவறையில் பிரசவம் பார்த்துள்ளார்.

அப்போது குழந்தை இறந்தது. இதனால் அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டதாக தோழிகளுக்கு தகவல் அளித்து, எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை

பின்னர் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை புகாரின் படி நர்ஸ் வினிஷா மீது ஐபிசி 315 சட்டப்பிரிவுப்படி வழக்கு பதிந்து மாம்பலம் போலீசார் விசாரித்தனர். இதற்கிடையே குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தையை வினிஷா கை, கால்களை வெட்டி கொன்றது உறுதியானது.

தனக்கு தானே பிரசவம் பார்த்த நர்ஸ்

அதை தொடர்ந்து வினிஷா மீது மாம்பலம் போலீசார் கொலை (302) வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும், நர்ஸ் வினிஷாவை நேற்று முன்தினம் மாம்பலம் போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர்.

மாம்பலம் போலீசார்

அவரிடம் நடத்திய விசாரணையில், பிரசவ வலி ஏற்பட்ட போது, குழந்தையை கழிவறையில் பெற்று எடுத்தேன். நல்ல முறையில் பிறந்த குழந்தையை, என்னால் ஒரு தாயாக சுதந்திரமாக வளர்க்க முடியாத நிலை இருந்தது.

வெளி உலகம் தவறாக பேசும், குழந்தையும் பாதிக்கப்படும் என்பதால், கண்களை மூடிக்கொண்டு கழுத்தை நெரித்து கொன்றேன்.

நர்ஸ் கைது

பிறகு குழந்தை பிரசவத்தின் போது கை மற்றும் கால்கள் கிழிந்ததால் ரத்த போக்கு ஏற்பட்டு இறந்ததாக கூறி, கை மற்றும் கால்களை கத்தியால் வெட்டி கழிவறையில் போட்டு தண்ணீர் ஊற்றினேன் என்று வாக்கு மூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Share This Article
Leave a review