Nilgiri – வனப்பகுதியில் வன விலங்குகளை கண்டு ரசிக்க சென்ற சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டுயானை..!

1 Min Read

நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் வனத்துறை வாகனத்தில் வன விலங்குகளை கண்டு ரசிக்க சென்ற சுற்றுலா பயணிகள். அப்போது வனத்துறை வாகனத்தை யானை விரட்டியதால் பெரும் பரபரப்பு.

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெப்பம் காரணமாக குளுகுளு காலநிலையை அனுபவிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

சுற்றுலா பயணிகள்

அவ்வாறு வந்த சில சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்படும் வாகன சவாரி மூலம் வனப்பகுதிக்குள் வன விலங்குகளை கண்டு ரசிக்க சென்றனர்.

அப்போது வனபகுதியில் கூட்டமாக இருந்த யானை கூட்டத்தை சுற்றுலாப் பயணிகள் வாகனத்தில் இருந்த படி கண்டு ரசித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பெண் யானை ஒன்று கடுமையாக வனத்துறை வாகனத்தை விரட்டியது.

வனப்பகுதியில் வன விலங்குகளை கண்டு ரசிக்க சென்ற சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டுயானை

இதை பார்த்த வாகன ஓட்டுநர் யானையிடம் இருந்து வாகனத்தை பின்னோக்கி சென்று சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்து வந்தார். அப்போது வாகனத்தை விரட்டி வந்த அந்த காட்டு யானை அங்கு கிடந்த மரத்தை ஆக்ரோஷமாக உடைத்து தனது கோபத்தை வெளிப்படுத்தியது.

சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டுயானை காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல்

இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அந்த நொடியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review