நியூசிலாந்து விடுதியில் தீ விபத்து

1 Min Read

- Advertisement -
Ad imageAd image

நியூசிலாந்து விடுதியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் உள்ள  4 அடுக்கு மாடிகள் கொண்ட விடுதி ஒன்று இயங்கி வருகிறது.நேற்று இரவு எதிர்பாராதவிதமாக பயங்கர  தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக  உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

விபத்தின் போது விடுதியில் 100க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தெரிகிறது.மேலும், 90க்கும் மேற்பட்டார் தீ விபத்தில் சிக்கி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காணப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் பற்றி இன்னும் தெரியவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் பலியானோருக்கு பிரதமர் கிறிஸ் ஹாப்கின்ஸ் இரங்கல் தெரிவித்தார். நியூசிலாந்து விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review