நீதி யாத்திரை இன்று தொடக்கம் -காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி…!

2 Min Read

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபெறும் இந்த யாத்திரை மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த நிலையில் 15 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்கள், 100 மக்களவை தொகுதிகள், 337 சட்டமன்ற தொகுதிகளின் வழியாக 67 நாட்களுக்கு இந்த யாத்திரை நடைபெறும்.

- Advertisement -
Ad imageAd image

அதேபோல் சுமார் 6713 கி.மீ. தூரத்துக்கு யாத்திரை நடைபெறுகிறது. இந்த யாத்திரை பெரும்பாலும் பேருந்து மூலமாக மேற்கொள்ளப்படும். நடைபயணமாகவும் மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரையானது மார்ச் 20 அல்லது 21ம் தேதி மும்பையில் நிறைவடையும். மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கு அரசு வாய்ப்பு வழங்காததால், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்தவம் ஆகிய கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டும் நோக்கத்தில் பாரத் நீதி யாத்திரையை மேற்கொள்வதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ராகுல் காந்தி

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆட்சியின்போது இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவதற்காக பாரத் ஜோடோ நீதி யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. துன்பப்பட வேண்டாம், பயப்பட வேண்டாம் என்ற வரிகளோடு நீதி யாத்திரை கீதம் அனைத்து சமூக வலைதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த யாத்திரையை மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது.

ஆனால் அங்கு அனுமதி வழங்குவதில் மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதைத்தொடர்ந்து தவுபல் மாவட்டத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்குகிறது. இதைப்போல அசாமில் 2 இடங்களில் இரவு ஓய்வெடுப்பதற்கும் மாநில அரசு அனுமதி மறுத்தது. இதனால் மாற்று இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி மற்றும் பொது மக்கள்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட நிலையில் இன்று 2-வது கட்டமாக பாத யாத்திரையை தொடங்குகிறார். மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபெறும் இந்த யாத்திரை மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் இருந்து இன்று (ஜன.14) தொடங்குகிறது.

Share This Article
Leave a review