கார்த்திகேயன்

மாணவர்களை கல்வியறிவு பெருவதற்காக தான் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறோம்.ஆனால் பள்ளிகளில் கல்வி கற்றுக் கொடுப்பதோடு பாலியல் தொல்லைகளும் ஏற்படுவது மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.அப்படி தான் ஒரு சம்பவம் விழுப்புரம் அருகே தனியார் பள்ளி முதல்வர் பத்தாம் வகுப்பு மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக காவல் நிலையத்தில் புகார். விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தலை மறைவான பள்ளி முதல்வரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே இயங்கி வரும் கிரீன் பாரடைஸ் பள்ளியில் இந்த பள்ளியில் ஏராளமான கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இந்த பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு அதே பள்ளியில் முதல்வராக இருக்கும் கார்த்திகேயன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மாணவிகள் இது தொடர்பாக தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்த போது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இந்த கார்த்திகேயன் என்பவர்.அதே பள்ளியில் மாணவர்களுக்கு ஒரு பாடப்பிரிவுக்கு ஆசிரியராகவும் இருந்துள்ளார்.வகுப்பு நேரத்தில் இந்த முதல்வர் கார்த்திகேயன் தன் அறைக்கு அழைத்து தனக்கு கைகால்கள் பிடித்துவிட சொல்வாராம்.அப்போது அந்த மாணவிகளிடம் தேவையில்லாமல் பாலியல் சீண்டல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இது போல முதல்வர் நடந்து கொள்வதை பெற்றோர்களிடம் தெரிவித்தால் தங்களை பெயிலாக்கி விடுவதாக மிரட்டியுள்ளார்.இதனால் பயந்து பல பெண் மாணவர்கள் தங்கள் வீடுகளில் இந்த சம்பவத்தை சொல்லுவதில்லை.ஓரிரு மாணவிகள் தங்கல் வீட்டில் தெரிவிக்க பெற்றோர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல்வர் கார்த்திகேயன் மீது புகார் அளித்தனர்.

காவல் நிலையம்

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் மீது பெண்குழைந்தைகளை அடைத்துவைத்தல்,தேவையில்மல் தொடுதல் போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை தேடி வருகின்றனர். கைதுக்கு அஞ்சி பள்ளி முதல்வர் கார்த்திகேயன் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விரைவில் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் பள்ளி முதல்வர்தரப்பில் இருந்து பெற்றோர்கள் தரப்பிறகு வழக்கை வாபஸ் பெற தொடர்ந்து பல அரசியல் அழத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.விரைவில் முதல்வரை கைது செய்ய வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here