கோவையில் கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் வீதி கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை காவலில் எடுத்து விசாரணை.
கோவையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவடடம், போத்தனூர் திருமறை நகர் பகுதியை சேர்ந்த தாஹா நசீர் என்பவரும், கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவரும் ஆகிய இருவரும் கடந்த நவம்பர் மாதம் 2 ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து, கார் சர்வீஸ் நிறுவனத்தில் பெயின்டராக வேலை பார்த்து செய்த வந்த நபரை, கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, நடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர், ஜமீசாமு பின் சந்தித்து பேசி இருப்பது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. அப்போழுது தாஹா நசீரும், ஜமேஷா முபீனும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிக் கொண்டிருந்ததும், கார் குண்டுவெடிப்புக்கு முந்தைய நாளும், இருவரும் சந்தித்து கொண்டதும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேபோல ஏற்கனவே கைதான முகமது இத்ரீஸ் என்பவருடனும், ஜமீஷா முபீன் பேசி இருந்ததும் தெரியவந்த நிலையில் , இருவரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்காக காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும் இருவரையும் சென்னை புழல் சிறையில் இருந்து காவலில் எடுத்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இருவரையும் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
முகாம் அலுவலகத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை நடைபெற்று மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் மேலும் சிலர் கைதாக வாய்ப்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.