அயோத்தி ராமர் கோவில் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்யும் போது நான் அங்கு சென்று கைதட்ட வேண்டுமா என்று புரி சங்கராச்சாரியார் நிஸ்சாலந்த சரஸ்வதி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி ராமர் கோவிலில் சிலையை பிரதிஷ்டை செய்யும் போது தான் கைகட்டி வாழ்த்து தெரிவிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ள பூரி சங்கராச்சாரியார், நிஸ்சாலந்தா சரஸ்வதி, அந்நிகழ்ச்சிக்கு தான் போகப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலின் முதல் தள கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற ஜனவரி 22 ஆம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான இறுதிகட்ட பணிகளில் மாநில அரசும், அயோத்தி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்திரம் அறக்கட்டளையும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நாடு முழுவதிலிமிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள், ஆன்மீக தலைவர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக பங்கேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி, ராமர் சிலையை கோயிலில் பிரதிஷ்டை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல அரசியல் கட்சியினரும் விருப்பம் தெரிவித்துள்ள போதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராமர் கோவிலை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி புறக்கணித்துள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து இதுவரை தனது முடிவை அறிவிக்கவில்லை. இந்த நிலையில், பூரி கோவர்ந்தன பீட மடத்தின் 145-வது சங்கராச்சாரியார் நிஸ்சாலந்தா சரஸ்வதி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரட்லம் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற இந்து ஜக்ரான் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “ ராமர் கோவிலில் பிரதமர் மோடி சிலையை பிரதிஷ்டை செய்வதை பார்த்து நான் கைதட்ட வேண்டுமா? எனக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு. நான் உட்பட இருவர் விழாவில் பங்கேற்கலாம் என அழைப்பிதழ் அனுப்பியுள்ளனர். அதை தவிர வேறு யாரும் என்னை தொடர்பு கொண்டு அழைப்பு விடுக்கவில்லை. வழிபாட்டு தலங்களை சுற்றுலாத் தளங்களாக மாற்றப்படுவதை ஏற்க முடியாது” என்றார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜன.22 ஆம் தேதி நடக்கிறது. அன்று ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்ய உள்ளார். இந்த விழாவுக்காக நாடு முழுவதும் இருந்து முக்கிய வி.ஐ.பி.க்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய சாமியார்களை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புரி மடத்தின் சங்கராச்சாரியார் நிஸ்சாலந்த சரஸ்வதிக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு தொடர்பாக நேற்று புரி சங்கராச்சாரியார் நிஸ்சாலந்த சரஸ்வதி கூறும்போது,’ அயோத்தி ராமர் கோவிலில் ராமர் சிலையை பிரதமர் மோடி தொட்டு அதனை பிரதிஷ்டை செய்வார். நான் அங்கு போய் கைகளை தட்டி கொண்டாட வேண்டுமா?. நான் அயோத்திக்கு செல்லப்போவதில்லை’ என்று தெரிவித்தார். அவரது பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.