தமிழ் மீது தீராத காதல் கொண்டவர் மோடி-அண்ணாமலை

2 Min Read
விக்கிரவாண்டியில்

நரேந்திர மோடி இதுவரை 29 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார் 2024 மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி ஆட்சி அமைக்க வேண்டும்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார்.விக்கிரவாண்டியின் முக்கிய வீதிகளில் பாத யாத்திரை மேற்கொண்ட அவர் பொது மக்களை நேரில் சந்தித்து உரையாற்றினார். அதற்குப் பிறகு அண்ணா சிலை அருகில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பொதுமக்களிடையே உரையாற்றினார் அப்பொழுது உரையாற்றும் பொழுது.
தமிழகத்தில் ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். விவசாயிகளின் நிலையும் அப்படியே தான் இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எதுவும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக எல்லா அரசியலையும் பார்த்தாகிவிட்டது. பட்டிக்காடு கிராமங்களை தான் இதுவரை திமுக ஆட்சி வைத்திருக்கிறது. இதுதான் திராவிட மாடல்.

நடைபயணம்

வருகின்ற 2024 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி நேற்று வரை 122 சட்டமன்ற தொகுதிகள்.இன்றோடு 123 வது தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறேன். தமிழகத்தில் படித்துவிட்டு இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர திமுக அரசு முயலவில்லை. இதுவரை 29 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார் நரேந்திர மோடி.46 சங்க இலக்கியங்களை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கற்கும் விதமாக பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் நரேந்திர மோடி.தொடர்ந்து தமிழ் மீது மாறாத பற்று கொண்டுள்ளவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

அண்ணாமலை பேசுகிறார்

தமிழக அரசு கல்வி வேலை வாய்ப்பில் அக்கறை செலுத்துகிறதோ இல்லையோ டேஸ்மாக்கில் அக்கறை செலுத்துகிறது.தமிழகத்தில் தீபாவளி விற்பனை மட்டும் டாஸ்மாக் கடைகளில் 467 கோடி. கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்ததற்கு காரணம் திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தான் காரணம். பல கோடி ஊழல் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர் தான் திமுக அமைச்சர் பொன்முடி. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தி தலை விரித்தாடும் என்கிறார்கள். அப்படி இருக்க நரேந்திர மோடி ஏன் திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டும். தமிழ் மீது தீராத காதல் கொண்டவர் நரேந்திர மோடி.தமிழகத்தில் குடிநீர் இணைப்புகளை வீடு வீடாக கொடுத்தவர் மோடி,விவாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 கொடுத்தவர் மோடி,ஏழை அளிய மக்கள் வசிக்க வீடு கட்டித்தந்தவர் மோடிஎனவே எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி ஆட்சி அமைக்க நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பேசினார்.

Share This Article
Leave a review