ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்குத் தமிழர்களே காரணம்-அமைச்சர் ஷோபா கருத்தை வாபஸ் பெற்றார்

3 Min Read
அமைச்சர் ஷோபா

கண்டனம்

- Advertisement -
Ad imageAd image

திமுக அதிமுக கண்டனம் “மன்னித்துவிடுங்கள்..” தமிழர்கள் குண்டு வைத்தாக வார்த்தை விட்ட அமைச்சர் ஷோபா கருத்தை வாபஸ் பெற்றார் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்குத் தமிழர்களே காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கூறியது சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக அவரே விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். கடந்த மார்ச் 1ஆம் தேதி கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் திடீர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த மோசமான சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிரிழக்கவில்லை. இருப்பினும் சுமார் 10 பேர் காயமடைந்தனர்.

கண்டனம்

சர்ச்சை

இந்த சம்பவம் குறித்து முதலில் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பிறகு இந்த விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் வழக்கைத் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒருவரை பெல்லாரியில் வைத்து கைது செய்தனர். இந்தச் சூழலில் பெங்களூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், பெங்களூரில் தமிழர்கள் தான் குண்டு வைத்தார்கள் என்று கூறியது சர்ச்சையானது அதாவது அவர், “தமிழகத்தைப் பயிற்சி பெற்றவர்கள் கர்நாடகாவுக்கு வந்து எங்கள் ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். கர்நாடகா மீது தாக்குதல் நடத்தும் அவர்கள் மீது கர்நாடகா காங்கிரஸ் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் போடுவோர் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை” என்றார்.

இது மிகப் பெரியளவில் சர்ச்சையானது. பாஜகவின் இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கருத்துக்கு நெட்டிசன்ள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தேர்தல் காலத்தில் பிரிவினை பேசும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர், இவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “குண்டு வைத்த தமிழர்கள்.இது பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே இது குறித்து விளக்கமளித்துள்ளார். ஷோபா கரந்த்லாஜே மேலும் தனது எக்ஸ் பக்கத்தில், “என் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு, நான் என்ன சொன்னேன் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது கருத்துக்கள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதை உணர முடிகிறது. இதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்ற ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து மட்டுமே எனது கருத்து இருந்தது. தமிழ்நாட்டில் யாரேனும் ஒருவர் எனது கருத்தால் காயமடைந்திருந்தால் இதயத்தில் இருந்து நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர் ஷோபா

திரும்பப் பெறுகிறேன்

மேலும், எனது முந்தைய கருத்துக்களைத் திரும்பப் பெறுகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.அதேபோல மற்றொரு பதிவில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ஸ்டாலின் அவர்களே, உங்கள் ஆட்சியில் தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது? நீங்கள் செய்யும் அரசியல், இந்துக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் மீதான தாக்குதல்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. நீங்கள் கண்களை மூடி இருக்கும் போது ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் குண்டுவெடிப்புகள் அடிக்கடி நடக்கிறது.

உங்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ராமேஸ்வரம் குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர் கிருஷ்ணகிரி காடுகளில் பயிற்சி பெற்றவர். அதைத் தான் நான் குறிப்பிட்டேன். தமிழ் மக்களுக்குக் கர்நாடகா உடன் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர். தமிழர்கள் கர்நாடகாவின் வளர்ச்சியில் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்துள்ளனர். அவர்கள் கர்நாடகாவுக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளனர். எங்களுடன் நெருங்கிய கலாச்சார பிணைப்புகளைக் கொண்டு இருக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளனர். இவர் இப்படிச் சொன்னாலும் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற்றார்கள் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அவர்களும் இதுபோல எந்தவொரு தகவலையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a review