வங்கக் கடலில் புதிய புயல் மழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம்.

1 Min Read
வானிலை ஆய்வு மையம்

கத்தரி வெயில் தைடங்கி தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில்,தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது.இன்நிலையில் வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 8ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 8ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 8ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review