மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நள்ளிரவு வடிவேல் என்பவர் மது போதையில் ரகளை செய்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம், அடுத்த மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனைக்கு மன்னார்குடியையொட்டி உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமன்றி முத்துப்பேட்டை, கோட்டூர், நீடாமங்கலம் முதலான பகுதிகளில் இருந்தும் தினசரி 700-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
குறிப்பாக இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க கூடிய சிறப்பு மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் முச்சுதிணறல் காரணமாக சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு ட்ரிப்ஸ் (சிலைன்) போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் நோயாளி அனுமதிக்கப்பட்ட வார்டில் செவிலியர் பணியில் இல்லாத நிலையில் நோயாளி அவதிபட்டிருந்த நிலையினை கண்ட அங்கிருந்த ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த பெண் துப்புரவு பணியாளர் நோயாளிக்கு ட்ரிப்ஸ் போட்டுள்ளார்.

இதனை கண்ட அங்கிருந்த நோயாளியின் பாதுகாவலர் ஒருவர் அதனை தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நள்ளிரவு மன்னார்குடி விழல்காரதெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் வடிவேலு மது போதையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பகுதிக்கு சென்று அங்கு உள்ள மேஜை நாற்காலிகளை உடைத்து பெரும் ரகளையில் ஈடுபட்டார்.
அப்போது மருத்துவம் பார்த்த பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் வெளியே ஓடிவிட்டனர்.

மருத்துவமனையில் நள்ளிரவு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட விழல்காரர் தெரு பகுதியை சேர்ந்த வடிவேலை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நள்ளிரவு வடிவேல் என்பவர் மது போதையில் ஈடுபட்டு ரகளை செய்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.