கேரளாவை சேர்ந்த மலையாள சினிமா பட தயாரிப்பாளர் ஜானி தாமஸ் கோவை குற்றப்பிரிவு போலீசாரால் கைது.
கனடாவில் வசிக்கும் கோவையை சேர்ந்த உதய்சங்கர் என்பவர் மலையாள பட தயாரிப்பாளர் ஜானி தாமஸ் என்பவருக்கு 2016 ஆம் ஆண்டு பட தயாரிப்பு பணிகளுக்காக 2.75 கோடி வழங்கி உள்ளார்.

அப்போது அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்த நிலையில், பணத்தை திருப்பி கேட்ட பொழுது கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் உதய்சங்கர் கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் ஜானி தாமஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற ஜானி தாமஸ்யை கொச்சி போலீசார் நேற்று நெடும்பாஞ்சேரி விமான நிலையத்தில் பிடித்து கோவை குற்றபிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை குற்றப்பிரிவு போலீசார் மலையாள பட தயாரிப்பாளர் ஜானி தாமஸ்ஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.