- மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கு மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி தொடங்க இருப்பதாக தெரிகிறது. இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்வது எந்த வீரரை வாங்குவது என போட்டி போட்டு வேலை செய்து வருகிறார்கள்.
ஆனால் ஐந்து முறை கோப்பையை வென்றிருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடுவாரா இல்லையா என்பது கூட தெரியாமல் இன்னும் அமைதியாக இருப்பது சிஎஸ்கே ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.
ஐபிஎல் கோப்பையை வென்று நான்கு ஆண்டுகள் ஆகி இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறது. மும்பை அணி ஏற்கனவே யாரை தக்க வைத்துக் கொள்வது என்பது குறித்து முடிவு செய்துவிட்டது.
அந்த அணியில் இருந்த மிகப்பெரிய பிரச்சனையான ரோகித் சர்மா, பும்ரா ஹர்திக் பாண்டியா சூரியகுமார் என நான்கு டாப் வீரர்களுக்கும் எவ்வளவு சம்பளம் வழங்குவது என்ற பிரச்சனையை மும்பை அணி தீர்த்து விட்டது. இந்த சூழலில் அணியை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக மற்ற அணி வீரர்களிடம் சென்று நீங்கள் ஏலத்தில் பங்கு பெறுங்கள் உங்களை நாங்கள் அதிக தொகைக்கு எடுக்கின்றோம் என்று மும்பை அணி பேசி வருகிறது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/an-old-grandmother-screamed-that-the-houses-built-on-the-government-land-in-vanchiwaka-will-be-removed-and-she-will-not-come/
இப்படித்தான் குஜராத் அணியில் இருக்கும் ரஷித் கானை ஏலத்தில் பங்கேற்க மும்பை அணி வற்புறுத்தி இருக்கிறது. இதே போல் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவியா மாறன் தங்கள் அணி வீரர்களை விடக்கூடாது என்பதற்காக அவர்களிடம் பேசி அதிக சம்பளம் வழங்க முடிவெடுத்திருக்கிறார். இதைப் போன்று தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டம் திட்டி வருகிறார்.
நமது பங்காளியான ஆர் சி பி அணி கூட எந்த வீரர்களை தக்க வைப்பது என்பதை முடிவெடுத்து விட்டது. அது மட்டுமில்லாமல் புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் பணியிலும் ஆர்சிபி ஈடுபட்டு வருகிறது. இப்படி ஒவ்வொரு அணிகளும் விறுவிறுப்பாக இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணி என்ன செய்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை.
சிஎஸ்கே தொடர்பான எந்த செய்தியும் வெளியாவது இல்லை. இன்னும் சொல்லப்போனால் தோனி வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பது கூட அந்த அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதனுக்கு தெரியவில்லை. இதனால் இம்முறை சிஎஸ்கே அணி சரியான பாதையில் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு ரசிகர்களால் முன்வைக்கப்படுகிறது.
கடந்த மினி ஏலத்தில் எல்லாம் சிஎஸ்கே அணி கில்லியாக இருந்த நிலையில் தற்போது ஏன் அமைதியாக இருக்கிறது என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.