- கான்பூர்: கணவன் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்த பெண்ணின் வீடியோவை கண்டு போலீசார் திகைத்து விட்டார்கள்.. இது தொடர்பான விசாரணை நடந்து வந்தபோதிலும், வடமாநில மக்கள் கடுமையான அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
“கர்வா சவுத்” என்பது, நம்ம ஊரில் சுமங்கலி பூஜைகள் செய்யப்படுவதை போலவே, வட இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.. கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக, மனைவிமார்கள் விரதமிருந்து இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.
சிறப்பு பண்டிகை: இந்த நாளில் பெண்கள் சூரிய உதயம் முதல் சந்திரன் உதயம் வரை கடுமையான விரதமிருப்பார்கள்.. இதன்மூலம், தங்களது கணவர்களின் ஆயுள் கூடும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். இந்த ஆண்டு இப்பண்டிகை நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அந்தவகையில், உத்தரப்பிரதேசத்திலும் ஒரு பெண் இந்த பண்டிகைக்காக விரதமிருந்து வந்தார்.. கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள இஸ்மாயில்பூர் பகுதியை சேர்ந்த இந்த பெண்ணின் பெயர் சவிதா.. கணவர் பெயர் ஷைலேஷ் குமார்…
மனைவி விரதம்: இவர் தன்னுடைய கணவரின் நீண்ட ஆயுளுக்காக, விரதம் மேற்கொண்டு வந்துள்ளார்.. தனக்காக தன்னுடைய மனைவி விரதமிருப்பதை பார்த்து பூரித்து போனார் கணவர்.. எனவே, இந்த பிரார்த்தனைக்காக மனைவிக்கு உதவியாக இருந்து வந்துள்ளார் ஷைலேஷ்குமார்.
நேற்று மாலையில் இந்த கர்வா சவுத் விரதம் முடிவடைந்தது.. எனவே தம்பதி இருவரும் உணவு சாப்பிட்டுள்ளனர்.. கணவனுக்காக சாப்பாடு பரிமாறிய மனைவி, அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, பக்கத்து வீட்டுக்கு சென்றுவருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.. அப்போது சாப்பிட்டு கொண்டிருந்த ஷைலேஷ், திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.
டாக்டர்கள்: இதைப்பார்த்து அவரது சகோதரர் அகிலேஷ், உடனடியாக ஷைலேஷை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். ஆனால், டாக்டர்கள் போராடியும் ஷைலேஷை காப்பாற்ற முடியவில்லை.. சிறிது நேரத்திலேயே ஷைலேஷ் உயிர் பிரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.. அப்போது திடீரென சவிதா வீடியோ ஒன்றை அனுப்பினார். அந்த வீடியோவில், “என்னுடைய கணவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது.. இந்த தகாத உறவு காரணமாகவே அவரை விஷம் வைத்துக் கொன்றேன்” என்று தெரிவித்திருந்தார்.. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக சவிதா கைது செய்தனர்.. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டும் வருகிறார்கள்.
ஆயுள் முடிந்தது: முன்னதாக, நேற்று முன்தினம் விரதம் முடிந்ததுமே, கள்ளக்காதல் விவகாரம் குறித்து கணவரிடம் சவீதா கேள்வி எழுப்பியிருக்கிறார்.. இது தொடர்பாக இருவருக்கும் பிரச்சனையும் எழுந்திருக்கிறது.. ஆனாலும் இருவரும் சமாதானம் ஆகி ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்… அதற்கு பிறகுதான் இவ்வளவும் நடந்து முடிந்துள்ளது. கணவரின் ஆயுள் நீடிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து விரதமிருந்த பெண், கணவரின் ஆயுளையே முடித்துவிட்ட சம்பவம் வடமாநிலத்தில் பரபரப்பை தந்து வருகிறது. ராஜஸ்தான்: நேற்றுதான் ராஜஸ்தானில் ஒரு தம்பதியிடையே துயர சம்பவம் நடந்தது.. அதாவது, கர்வை சௌத் பண்டிகை தினத்தன்று, கணவர் வீட்டுக்கு தாமதமாக வந்துவிட்டதால் மனைவி கோபமடைந்துள்ளார்.. எனவே, நள்ளிரவு 12.30 மணிக்கு மோனா கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.. அவரது கணவரும் மனைவியை பின்தொடர்ந்து வந்துள்ளார். ஆனால், அந்த மனைவியோ ஓடும் ரயில் முன்பு திடீரென பாய்ந்துவிட்டார்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/the-enforcement-department-raided-the-house-of-former-admk-minister-vaithiyalingam/
அவரது மரணத்தால் அதிர்ச்சியடைந்த கணவர், வீடு திரும்பியதுமே, அவர்களது 2 குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி அடங்காத நிலையில், அதற்குள் உ.பி.யில் மற்றொரு துயரம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.