கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் மீண்டும் தென்பட்ட சிறுத்தை சமூக வலைதளங்களில் வீடியோ வைரல். அந்த பகுதியில் பெரும் பரபரப்பு.
தற்போது முருகப் பெருமானின் ஏழாவது படை வீடு என்று போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது வனப்பகுதியை ஒட்டி மருதமலை அமைந்திருக்கிறது.

அப்போது வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் கோவில் படிக்கட்டுகள் மற்றும் சாலை வழியாக கடந்து செல்வது வழக்கம். அப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தைகள் நுழைவதும், அங்கு வசிக்கும் மக்களை அவை தாக்கும் சம்பவங்களும் நாட்டின் ஏதோவொரு மூலையில் அவ்வபோது நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன.
வாழ்விடத்தில் ஏற்படும் பாதிப்பு, வேட்டையாடப்படுவது மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, சிறுத்தைகள் காடுகளை விட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. சிறுத்தைகளின் இந்த வருகை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான மோதலுக்கு வழிவகுக்கிறது.

எந்த ஒரு விலங்கும் தங்களது வசிப்பிடத்தை விட்டு வெளியே வருவதில்லை. புறச்சூழல் அழுத்தம் மற்றும் வனப் பகுதிகள் மீதான மனிதனின் ஆதிக்கம் போன்ற காரணங்களால் தான் அவை வனத்தை விட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய வேண்டியதாகிறது.
அதிவேகமாக ஓடும் திறன் படைத்த சிறுத்தை, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டால், அதை பிடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இது அப்பகுதி மக்களுக்கு பெரும் இடையூறாகவும், அச்சுறுத்தலாகவும் அமையும் என்று எச்சரிக்கிறார்கள்.

எனவே மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி மலை அடிவாரம் படிக்கட்டுகள் கோவில் வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மருதமலை கோவில் வளாகம் அருகே ஒரு சிறுத்தை சாலை கடந்து சென்றது.
இதனை அந்த வழியாக சென்ற பக்தர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அப்போது மருதமலையில் இரவு பக்தர் ஒருவர் காரில் செல்லும் போது மலை பாதையில் முதல் வளைவில் சிறுத்தை ஓடியது. இதனை அவர் படம் பிடித்து வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் மருதமலை கோவிலில் மீண்டும் சிறுத்தை தென்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.