மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிப்பு – கடைசி நேர ட்விஸ்ட்..!

2 Min Read
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிப்பு

நீண்ட இழுபறியில் இருந்த மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் ஆர்.சுதாவின் பின்னணி குறித்தும், இவருக்கு எப்படி சீட் கிடைத்தது என்றும் தேடல்கள் அதிகரித்துள்ளன.

- Advertisement -
Ad imageAd image

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது 7-வது கட்ட வேட்பாளர் பட்டியலை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது.


மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிப்பு

அதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதும் 5 பேர் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தின் சுர்குஜா (சசி சிங்), ரைகார் (மேங்கா தேவி), பிலாஸ்பூர் (தேவேந்தர் சிங் யாதவ்), கன்கேர் (பிரேஷ் தாகூர்) ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனுடன் தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள ஒரு தொகுதியான மயிலாடுதுறைக்கு வழக்கறிஞர் ஆர்.சுதா வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.


மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிப்பு

அதுவும் வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அதில், திருவள்ளூர்- தனி, கிருஷ்ணகிரி, கரூர், கடலூர், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். எஞ்சிய மயிலாடுதுறைக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.


மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிப்பு

காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி பூசலுக்கு பஞ்சமிருக்காது. அதிலும் தேர்தலில் போட்டியிட சீட் வேண்டுமெனில் டெல்லி வரை மல்லுக்கு சென்று விடுவர்.

அந்த வகையில் மயிலாடுதுறை தொகுதிக்கு பிரவீன் சக்கரவர்த்தி, டாக்டர் செல்லக்குமார், மணிசங்கர் அய்யர், தங்கபாலு, சி.டி.மெய்யப்பன், ஆர்.சுதா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. இவர்கள் டெல்லி மேலிடத்தில் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின.


மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிப்பு

அதிலும் ராகுல் காந்திக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி, தனக்கு சீட் கிடைக்க பலமாக காய் நகர்த்தி வந்தார். ஆனால் மயிலாடுதுறை காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இவர் அந்த தொகுதிக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கு கூட எந்தவித சம்மந்தமும் இல்லாதவர். எனவே சீட் கொடுக்கக் கூடாது என்ற குரல் வலுத்து வந்தது. இதற்கிடையில் கரூர் ஜோதிமணியை போன்று பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது.

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிப்பு

அதில் வழக்கறிஞர் ஆர்.சுதா ஊடக வெளிச்சம் பெற்ற நபராக இருப்பது கவனம் பெற்றது. இந்த சூழலில் வழக்கறிஞர் ஆர்.சுதாவின் பெயரை கட்சி மேலிடம் டிக் அடித்தது. இவரது பெயரை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பரிந்துரை செய்ததாக கூறுகின்றனர்.

ஆர்.சுதா பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக பங்கு பெற்றிருக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a review