kovai : தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் உயிரிழப்பு – போலீசார் தீவிர விசாரணை..!

2 Min Read

கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் தனுஷ் என்ற மாணவர் கல்லூரி வளாகத்தில் உள்ள கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த தனுஷ் என்பவர் கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். விடுமுறை நாளான இன்று விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர் தனுஷ் சக மாணவர்களுடன் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் உயிரிழப்பு

இந்த நிலையில் மைதானத்தில் இருந்து விடுதியின் கழிவறைக்கு மாணவர் சென்ற பொழுது திடீரென அங்கு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அதில் தலைப்பகுதியில் மாணவர் தனுஷிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவர் மயக்கம் அடைந்த தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்து சென்றனர்.

கோவை அரசு மருத்துவமனை

ஆனால் அவர் இறந்து விட்டதாக கூறவே மாணவரின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கோவை அரசு மருத்துவமனையில் மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாணவர் தனுஷ் மரணம் குறித்து கல்லூரி நிர்வாகம் உரிய முறையில் தெரிவிக்கவில்லை எனவும், மாணவரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாணவரின் பெற்றோர்

கல்லூரியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை எனவும், மாணவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்கே நீண்ட நேரம் ஆகிவிட்டதாகவும், அதன் பின்னர் தனியார் மருத்துவமனைகள் ஒவ்வொன்றிற்காக அழைத்துச் சென்ற நிலையில், மாணவரின் உயிர் பிரிந்து விட்டதாகவும், கல்லூரியில் சிறப்பாக படிக்கக்கூடிய மாணவன் தனுஷ் எனவும், அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

குனியமுத்தூர் போலீசார்

இந்த கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர் உயிரிழந்த குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review