கோவை – பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் அண்ணாசிலை பகுதியை அடுத்து காந்திநகர் பகுதி உள்ளது. இங்கு உள்ள 7-வது தெருவில் நேற்று காலை சுமார் 8:45 மணியளவில் மின்கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அருந்து விழுந்துள்ளன.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டி ஒருவர் மீது மின் கம்பிகள் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மின்கம்பங்கள் சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த விபத்தின் சிசிடிவி கட்சிகள் வெளியாகி உள்ளது.